லாரியில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
லாரியில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
ஆலங்குடி:
ஆலங்குடியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு தகவல் கிடைந்தது. தகவலின் பேரில் ஆலங்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் ஆலங்குடி கலிபுல்லா நகர் வளைவு முக்கத்தில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கறம்பக்குடி தாலுகா மழையூரைச்சேர்ந்த கோவிந்தசாமி (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தசாமியை கைது செய்து, 390 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை புதுக்கோட்டை குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு அலுவலரிடம், ஆலங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story