பொதுமக்கள் எதிர்ப்பால் 3-வது முறையாக ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
செஞ்சி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் 3-வது முறையாக ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தப்பட்டது.
விழுப்புரம்
செஞ்சி:
செஞ்சி அருகே சத்தியமங்கலம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியுள்ளனர். இதனை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே 2 முறை முயன்றும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ், வருவாய் ஆய்வாளர் பழனி, சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் வேலு ஆகியோர் பொக்லைன் எந்திரங்களுடன் இன்று 3-வது முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது ஒரு வீட்டின் சுவர், பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story