4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்


4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

சாராய வியபாரிகளுடன் தொடர்பு?

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 85 லிட்டர் சாராயம், 70 லிட்டர் சாராய ஊறல், 58 லிட்டர் கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி, வெண்ணிலா, ஏட்டு வசந்தா, வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ்காரர் கோபி ஆகிய 4 பேரும் சாராய வியாபாரிகளுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சவும், விற்கவும் உடைந்தையாக இருப்பதாக புகார்கள் வந்தது.

ஆயுதப்படைக்கு மாற்றம்

அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் போலீசார் கலகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறுகையில் மாவட்டத்தில் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சட்டவிரோத செயல்களுக்கு யார் துணை புரிந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story