பட்டியில் புகுந்து ஆடு திருடிய 4 பேர் கைது


பட்டியில் புகுந்து ஆடு திருடிய 4 பேர் கைது
x
திருப்பூர்


குண்டடம் அருகே விவசாயியின் பட்டியில் புகுந்து ஆடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆடு திருட்டு

குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 3செம்மறியாடுகள் மற்றும் 1 வெள்ளாடு ஆகியவை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி குண்டடம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று காங்கயம் அடுத்துள்ள வெள்ளகோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 3செம்மறியாடுகள் மற்றும் 1வெள்ளாடு ஆகியவை இருந்தன. மேலும் காரில் இருந்த 4பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள மன்னம் பகுதியைச் சேர்ந்த பைஜூ (வயது49), திருச்சி கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்தஆனந்தன் (47), குண்டடம் சோதியம்பட்டியை சேர்ந்த பூபதிராஜா (34), வேங்கிபாளையம் நவீன்குமார் (32) என்பதும், ஜோதியம்பட்டியில் ஆடுகளை திருடி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 ஆடுகள், அதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும்பறிமுதல் செய்யப்பட்டது


Next Story