பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
திருப்பூர்
உடுமலையையடுத்த மலையாண்டிபட்டினத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டபோது அங்குள்ள கோவிலுக்கு அருகில் கூட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்த சாந்தகிருஷ்ணன் (வயது 47), குரல்குட்டையைச் சேர்ந்த நடராஜ் (44), கண்ணமநாயக்கனூரைச் சேர்ந்த ஜோதிமணி (45), முருகன் (52), அன்பழகன் (29), மடத்தூரைச் சேர்ந்த அருண்குமார் (40), போடிப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (65), ராஜ்குமார் (43) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.53 ஆயிரத்து 120 மற்றும் சீட்டுக்கட்டையும் பறிமுதல் செய்தனர்.
Next Story