ஆவின் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது


ஆவின் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
x

நீடாமங்கலம் அருகே ஆவின் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவாரூர்

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அருகே ஆவின் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆவின் நிறுவன ஊழியர்

நீடாமங்கலம் அருகே உள்ள காளாஞ்சிமேடு மேலத்தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் மதன்ராஜா (வயது23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் திருவாரூர் ஆவின் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மாலை இவருடைய வீட்டின் வழியாக நாவல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சத்தம் போட்டபடி சென்றனர்.

இதை மதன்ராஜா தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மதன்ராஜாவை கம்பி, கட்டைகளால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

4 பேர் கைது

இதில் பலத்த காயம் அடைந்த மதன்ராஜா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்ராஜாவை தாக்கிய நாவல்பூண்டி மேலத்தெருவை சேர்ந்த சலேந்திரன் (28), அய்யப்பன் (24), பிரகாஷ் (24), வீரகுமார் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story