கஞ்சா கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது
கஞ்சா கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வேல் அழகனுக்கு காட்டூர் மஞ்சத்திடல் பகுதியை சேர்ந்த பாபுவின் மகன் லாலா மியான்(வயது 25) என்பவருக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் லாலா மியானை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தபோது, திருச்சி பஸ் நிலையத்திற்கு 3 பேர் கஞ்சா கொண்டு வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து லாலா மியானோடு திருச்சி பஸ் நிலையத்திற்கு சென்று கண்காணித்தபோது, அங்கு 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பாளையங்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்த கோபால் மகன் சரவணன்(23), திண்டுக்கல் செம்பட்டி சித்தையன்கோட்டையை சேர்ந்த சிவா மகன் ரமணா (20), திருச்சி வடக்கு தாராநல்லூர் வசந்த நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ்(22) ஆகிய 3 பேரையும் பிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் பிடிபட்ட 4 பேரையும் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.