கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
x

சுத்தமல்லி பகுதியில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாரதியார்நகர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பேட்டையை சேர்ந்த சண்முகவேல் (வயது 38), சுடலை (32), பாரதியார் நகரைச் சேர்ந்த செண்பகராஜ் (34), திருப்பதி (31) ஆகியோரை சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வ வைத்திருந்தது தொியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story