மதுரையில் ஆட்டோவில் கஞ்சா விற்ற 4 பேர் கைது -23 கிலோ பறிமுதல்


மதுரையில்  ஆட்டோவில் கஞ்சா விற்ற 4 பேர் கைது  -23 கிலோ பறிமுதல்
x

மதுரையில் ஆட்டோவில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை


மதுரையில் ஆட்டோவில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் ரோந்து

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேரரசி தலைமையிலான போலீசார் கோச்சடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஆட்டோ நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகியது. பின்னர் அந்த ஆட்டோவில் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் 23 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

23 கிலோ கஞ்சா

இது தொடர்பாக ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் ஒத்தக்கடையை சேர்ந்த அருண்பாண்டி (வயது 27), சுப்பிரமணி (23), முத்துக்குமார் (27), மணிகண்டன் (31) ஆகியோர் என்பதும், ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, அங்கிருந்து தப்பி ஓடிய காளீஸ்வரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story