சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது


சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்காசி

தென்காசியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்படி துணை சூப்பிரண்டு மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் மற்றும் போலீசார் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து கிடைத்த தகவலை தொடர்ந்து தென்காசி வாலியன் பொத்தையை சேர்ந்த கண்ணன் (வயது 23), இலஞ்சியை சேர்ந்த கணேசன் (27), ஞானகுரு (32), காசிமேஜர்புரத்தை சேர்ந்த கணேசன் (21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

4 பேர் கைது

இவர்கள் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சாவை சிறிய பொட்டலமாக தலா ரூ.600-க்கு விற்று வந்துள்ளனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 750 கிராம் கஞ்சாவும், கஞ்சா விற்க பயன்படுத்தப்பட்ட 2 ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story