சிறுமலையில் விவசாய கருவிகளை திருடிய 4 பேர் கைது
சிறுமலையில் விவசாய கருவிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே சிறுமலை அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). விவசாயி. நேற்று முன்தினம் அவரது தோட்டத்துக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அப்போது அந்த கும்பல், தோட்டத்தில் இருந்த விவசாய கருவிகளை திருடிவிட்டு தப்பி ஓட முயன்றது. இதனை பார்த்த சக்திவேல், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மர்மகும்பலை சேர்ந்த 4 பேரையும் மடக்கிப்பிடித்தார். பின்னர் அவர்கள் 4 பேரும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பொன்னுருக்கியை சேர்ந்த கணேசன் (39), குணசேகரன் (31), ராஜா (39), சவுந்தரபாண்டி (31) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விவசாய கருவிகளை பறிமுதல் செய்தனர்.