குடிநீர் குழாய்களை திருடிய 4 பேர் கைது


குடிநீர் குழாய்களை திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் ஊராட்சியில் குடிநீர் குழாய்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் கைகாட்டியில் இருந்து ஆருகுச்சி செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு இரும்பினால் ஆன 65 குடிநீர் குழாய்கள் குறிப்பிட்ட அளவில் பதிக்கப்பட்டு இருந்தன. இதன் மூலம் ஒசஹட்டி, ஆருகுச்சி, பெள்ளடா, நெய்யட்டி, ஊராடா, எத்திக்கல் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் 65 குடிநீர் குழாய்களை மர்ம நபர்கள் திருடி லாரியில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.ஒரு லட்ச மேல் இருக்கும். இதுகுறித்து ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி, துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் கொலக்ெகாம்பை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் மீன் மலையை சேர்ந்த சிவக்குமார், அஜித், சதிஷ்குமார், ஜீவா, பார்த்திபன் ஆகிய 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து சிவக்குமார், அஜித், சதிஷ்குமார், ஜீவாஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பார்த்திபனை ேதடி வருகின்றனர்.


Next Story