பெயிண்டர் கொலையில் 4 பேர் கைது
விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்த பெயிண்டர் மாரி செல்வம் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்
விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்த பெயிண்டர் மாரி செல்வம் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த பெயிண்டர் மாரிச்செல்வம் வயது (19) மர்மமான முறையில் கே.கே.எஸ்.எஸ்.என். நகர் புதர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி அவரது தந்தை சங்கர்(48) கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் பெரியார் நகரை சேர்ந்த விஜய்(23) என்பவர் தனது நண்பர்களான அண்ணாநகரைச் சேர்ந்த அஜித்குமார்(25), ராஜு(21) ஆகியோருடன் 2 தினங்களுக்கு முன்பு மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு மாரிச்செல்வத்திடம், எனது உறவினர் பெண்ணை நீ கேலி செய்து வருகிறாய். தொடர்ந்து கேலி செய்தால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.
உறுதியானது
இதனை தொடர்ந்து போலீசார் கொலைச் சம்பவத்தில் இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டனர். விஜய் உள்பட 3 பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மாரிச்செல்வம் தொடர்ந்து விஜயின் உறவினர் பெண்ணை கேலி செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் தனது நண்பர்களான ராஜு, அஜித்குமார் மற்றும் ஓடைப்பட்டியை சேர்ந்த சந்தனபாண்டியன்(20) ஆகியோருடன் சேர்ந்து மாரிச் செல்வத்தை மது குடிக்க அழைத்துச் சென்றனர். பின்னர் கே.கே.எஸ்.எஸ்.என்.நகர் பகுதியில் வைத்து கொலை செய்தனர்.
கைது
இதனை தொடர்ந்து விஜய், ராஜு, அஜித்குமார் மற்றும் சந்தன பாண்டியன் ஆகிய 4 பேரையும் பாண்டியன் நகர் போலீசார்கைது செய்தனர்.