4 ஆட்டோக்கள் பறிமுதல்
ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல்
ரெட்டியார்சத்திரம் பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 4 ஆட்டோக்களை நிறுத்தி அதை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் ஓட்டுனர் உரிமம் இன்றி ஆட்டோக்களை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் 4 ஆட்டோக்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story