நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:45 AM IST (Updated: 20 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை அருகே உள்ள குறிச்சி பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சன்மார்க்கம். இவருடைய மகள் ஷகிலா (வயது31). இவருக்கும், திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கீழத்தெருவை சேர்ந்த குமார் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் தற்போது சரவணன் நிச்சயம் செய்திருந்த ஷகிலாவை பிடிக்கவில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து ஷகிலா கேட்டபோது கொலை செய்து விடுவேன் என சரவணன், அவருடைய தந்தை குமார், தாயார் விஜயா, தம்பி பிரகாஷ் ஆகியோர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷகிலா புகார் கொடுத்தார். அதன்பேரில் சரவணன், குமார், விஜயா, பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story