4 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து
திருச்செந்தூரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி 4 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் குமார், பெலிக்சன், மாசிலாமணி ஆகியோர் ஆய்வு செய்தனர். பள்ளி வாகனங்களில் படிக்கட்டு, தரைதளம், ஜி.பி.ஆர்.எஸ். கருவி, வாகனங்களில் பின்பக்கம் கேமரா, முதலுதவி சிகிச்சை பெட்டி, அவசர தீயணைப்பான் உள்ளிட்ட சாதனங்களின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர். மொத்தம் 60 வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 25 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை சரிசெய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் 4 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் அவசர காலத்தில் தீயணைப்பானை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர காலத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து டிரைவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.