4-ந்தேதி மதுக்கடைகள் மூடல்


4-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
x

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 4-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு மூடி வைக்க வேண்டும் என மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story