தேனியில் 4 நாட்களாக பி.எஸ்.என்.எல். இணைய சேவை முடக்கம் வங்கி, அலுவலக பணிகள் பாதிப்பு


தேனியில் 4 நாட்களாக  பி.எஸ்.என்.எல். இணைய சேவை முடக்கம்  வங்கி, அலுவலக பணிகள் பாதிப்பு
x

தேனியில் கடந்த 4 நாட்களாக பி.எஸ்.என்.எல். இணைய சேவை முடங்கியுள்ளது

தேனி

தேனியில் கடந்த 6-ந்தேதி பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் (அகன்ற அலைக்கற்றை) இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் தரைவழி இணைய சேவை பாதிக்கப்பட்டது. 4-வது நாளாக இன்றும் பிராட்பேண்ட் இணைய சேவை முடங்கியது. இதனால் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்று இருந்த வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. வீடுகளில் பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்று இருந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேனி பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பிராட்பேண்ட் இணைய சேவை வழங்குவதற்கான தொழில்நுட்ப கருவி பழுதாகி விட்டது. புதிய கருவி கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) அந்த கருவி பொருத்தப்பட்டு இணைய சேவை சீராக வாய்ப்புள்ளது" என்றார்.


Next Story