எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து நேற்று முன் தினம் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான படகில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பாண்டியன், சக்திவேல், திருச்செல்வேன் மற்றும் சக்திவேல் என்ற மற்றொருவர் என 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்ற இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story