வெறிநாய் கடித்து 4 ஆடுகள் சாவு
இடையகோட்டையில் வெறிநாய் கடித்து 4 ஆடுகள் இறந்தன.
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டையில் மகாமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குலாம்மைதீன். இவர் தனது வீட்டின் முன்பு சிறிய கொட்டகை அமைத்து அதில் 4 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலையில் வழக்கம்போல் ஆடுகளை பார்க்க சென்றார். அப்போது ஆடுகளை வெறிநாய் ஒன்று கடித்து குதறிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே நாயை விரட்டிவிட்டு ஆடுகளை பார்த்தார்.
அப்போது வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகளும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த இடையக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மயில்சாமி, கால்நடை மருந்தக உதவி மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story