4 அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா


4 அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா
x

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 4 அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள 95 அரசு நடுநிலைப்பள்ளிகள், 76 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 230 பள்ளிகளில் இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், வானவில் மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிகளை முதன்மைக் கல்வி அதிகாரியின் ஆலோசனைப்படி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் அய்யப்பன் ஒருங்கிணைத்து நடத்தினார். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தனர். மாநில அளவில் பங்கெடுத்த மாணவர்களில் சுண்டப்பற்றிவிளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரவீன் குமார், குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி புவனேஷ்வரி, கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் ஸ்ரீனு பிரசாத், வாத்தியார்கோணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி கிருத்திகா ஆகியோர் வெற்றி பெற்று வெளிநாடு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். இந்த மாணவர்களை முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.


Next Story