4 வீடுகள் இடிந்து விழுந்தது
பந்தலூர் அருகே தொடர் மழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வீடுகளை இழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வருவாய்த்துறை மூலம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பந்தலூர் அட்டியில் சரஸ்வதி, ஆறுமுகம், நாகராஜ், சுலைமான் ஆகிய 4 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story