திருச்சி குளத்தில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் தாய்-மகள் உள்பட 3 பேர் கைது


திருச்சி குளத்தில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் தாய்-மகள் உள்பட 3 பேர் கைது
x

திருச்சி குளத்தில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தாய்-மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பரவாசுதேவன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை ராம்ஜிநகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறமுள்ள குளத்தில் தண்ணீர் இல்லாத இடத்தில் முட்புதர்களுக்கு இடையே கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் அங்கு இருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 100 கிலோ கஞ்சா கழிவுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இது தொடர்பாக நியூகாட்டூரை சேர்ந்த சரிதா (வயது 37), அவருடைய மகள் சிவானி (20), மில்காலனியை சேர்ந்த துளசி (68) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்கள். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story