ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
பீகார் மாநிலம் தானபூரில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ரெயிலின் கடைசி பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையில் 4 கிலோ கஞ்சா மற்றும் 6 கிலோ ஹான்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ரெயில்வே போலீசார் கஞ்சாவையும், ஹான்சையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story