அக்காள், தம்பி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அக்காள், தம்பி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
திருப்பூர்


திருப்பூரை அடுத்த அவினாசி பஸ் நிலையம் அருகில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்து, அவர்களிடம் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் ஒரு பெண்ணிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சாந்தி (வயது 54), அவரது தம்பி முருகேசன் (44), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வாகராயன்பாளையத்தை சேர்ந்த சரண் (22), சுரேஷ் (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி முன்மொழிவின்படி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து கலெக்டர் வினீத் உத்தரவுப்படி சாந்தி, முருகேசன், சரண், சுரேஷ் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று, கோவை சிறையில் உள்ள 4 பேரிடம் வழங்கப்பட்டது.


Next Story