4 மதுபான கடைகள் இன்று முதல் மூடல்


4 மதுபான கடைகள் இன்று முதல் மூடல்
x

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 4 மதுபான கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது.

திருப்பத்தூர்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் 500 கடைகளை மூடுவதாக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி - கலவை ரோட்டில் அகரம் கிராமத்தில் உள்ள கடை, வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள கடை என 2 மதுபான கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகிறது. இக்கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் அனைத்தும் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள மதுபானக்கிடங்கில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 40 மதுபான கடைகளில் பரமேஸ்வரர் நகர், ஏரிக்கொடியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை, ஜோலார்பேட்டை பார்சம்பேட்டையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை ஆகிய 2 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் செயல்படாது என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story