ஆசிரியர் தம்பதியை தாக்கி கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது


ஆசிரியர் தம்பதியை தாக்கி கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே, ஆசிரியர் தம்பதியை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே, ஆசிரியர் தம்பதியை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை வழக்கு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகள் அருணாச்சலம் (வயது 88), ஜாய் சொர்ணதேவி (83).

இவர்கள் 2 பேரையும் கடந்த ஜூலை மாதம் முகமூடிகள் அணிந்து வந்த கும்பல் கட்டி போட்டு 98 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மாரியப்பன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து, தென்காசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் 4 பேர் கைது

தொடர்ந்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திரதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கவிதா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேஷகிரி, ஏட்டுக்கள் மோகன்ராஜ், குமரேச சீனிவாசன், திருமலைக்குமாரசாமி, சவுந்திரராஜன், மகேஷ், லிங்கராஜா, ஜோதிமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொள்ளை வழககு தொடர்பாக சென்னையை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் மாரீஸ்வரன் (36), சத்யன் மகன் பாலாஜி (47), ரகுமத்துல்லா மகன் அப்துல் ரகுமான் (29), அம்பை அருகே அகஸ்தியர்பட்டியை சேர்ந்த மந்திரம் மகன் சொக்கலிங்கம் ஆகிய 4 பேரை கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்தை போலீசார் மீட்டனர்.



Next Story