வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா


வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா
x

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

உருமாறிய கொரோனா பி.எப்.7 வகையை சேர்ந்த வைரஸ், பல்வேறு நாடுகளில் வெகுவேகமாக பரவி வருகிறது. எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 889 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இதுவரை 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


Related Tags :
Next Story