வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது;20 பவுன் நகைகள் மீட்பு


வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது;20 பவுன் நகைகள் மீட்பு
x

துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

திருச்சி

துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

வாகன சோதனை

துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரகாந்த், பிரகாஷ் மற்றும் போலீசார் உப்பிலியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் துறையூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சரனீஸ் (வயது 22), போண்டா கார்த்திக் (20), செங்காட்டுப்பட்டி வீராபுரம் தெருவைச் சேர்ந்த செங்காட்டு பரத் (24), திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த மூர்த்தி (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு. உப்பிலியபுரம் மங்கப்பட்டி புதூர் தெற்குப்பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

20 பவுன் நகைகள் மீட்பு

மேலும் இவர்கள் துறையூர், எரகுடி, கோட்டாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி கிடந்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கார்த்திக் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் அவர்கள் வேறு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story