கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது
அரக்கோணத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, சில்வர் பேட்டை, எக்கு நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எக்கு நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் 4 பேரும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது, மணிகண்டன், பூவரசன் மற்றும் ஆகாஷ் என்பதும், கொள்ளை அடிப்பதற்காக திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளை சம்பவத்திற்காக வைத்திருந்த கத்தி, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story