கொட்டாம்பட்டி அருகே மதுவிற்ற 4 பேர் கைது; 960 பாட்டில்கள் பறிமுதல்
கொட்டாம்பட்டி அருகே மதுவிற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். 960 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
கொட்டாம்பட்டி
தைப்பூசத்தை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை என்பதால் கொட்டாம்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கொட்டாம்பட்டி நத்தம் சாலையில் உள்ள சக்கிலியன் கண்மாயில் மது விற்ற சென்னகரம்பட்டியை சேர்ந்த பாலுசெல்வம் (வயது 41), சந்தானம் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 518 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் பாண்டாங்குடி மதுக்கடை அருகே மது விற்ற பாண்டாங்குடியை சேர்ந்த உதயகுமார் (28) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 432 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொட்டாம்பட்டி போலீசார் சொக்கலிங்கபுரத்தில் ரோந்து சென்றபோது மது விற்ற மணல்மேட்டுபட்டியை சேர்ந்த சிவாவை(20) கைது செய்து அவரிடம் இருந்து 10 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.