தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, திருட்டு, கொலைமுயற்சி வழக்குகளில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை,திருட்டு, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 4 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கொலை

சாத்தான்குளம் பள்ளங்கிணறை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகன் சுடலை என்ற சுடலை மகாலிங்கம் (வயது 28). இவரை கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். அதே போன்று தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் சாலையப்பன் (38), நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வமுருகன் என்ற செல்வம் (34) ஆகியோரை கொலை முயற்சி வழக்குகளில் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த முத்துராக்கன் மகன் செந்தில்குமார் என்ற செந்தில்முருகன் என்பவரை திருட்டு வழக்கில் நாரைகிணறு போலீசார் கைது செய்தனர். இவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுடலை என்ற சுடலை மகாலிங்கம், சாலையப்பன், செல்வமுருகன் என்ற செல்வம், செந்தில்குமார் என்ற செந்தில்முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை 233 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story