சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x

ஆரணி அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சிசுந்தரம், ஜெயபால் மற்றும் தனிப்படை போலீசார் தொடர்ந்து சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை விண்ணமங்கலம் ஏரிக்கரை பகுதியில் தீர்த்தம்மாள் (வயது 43) என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்துடன் கைது செய்யப்பட்டார்.

இதேபோல சென்னத்தூர் லாடவரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டாயி (48) மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுசேந்திரன் (32) ஆரணிபாளையம் பகுதி சேர்ந்த பிரதீஷ் (22) ஆகியோரிடமும் தலா 5 லிட்டர் சாராயமும் டாஸ்மாக் மதுபாட்டில்கள் சில்லறையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story