கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேர் கைது
x

கூடலூரில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் 9-வது வார்டு மாமுண்டி தேவர் சந்து பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த புஷ்பம் (வயது 55), சிவனேசன் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் 1-வது வார்டு பேச்சியம்மன் கோவில் தெரு பகுதியில் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேந்த கணேசன் (37), முருகன் (56) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story