ஜவுளிக்கடை அதிபர் உள்பட 4 பேர் படுகாயம்
வெவ்வேறு விபத்துகளில் ஜவுளிக்கடை அதிபர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
வெவ்வேறு விபத்துகளில் ஜவுளிக்கடை அதிபர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜவுளிக்கடை அதிபர்
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஜவுளிகடை அதிபர் சோலைராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் சோலைராஜுக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பஸ் மோதியது
இதேபோல் விஸ்வநத்தம் பூச்சன்காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (54). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேவமார்தெரு வழியாக வந்த போது அங்கு வந்த அரசு பஸ் மாரியப்பன் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மாரியப்பன் மகன் காளிமுத்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவர் நாரணாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ரத்தினசாமி (44) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
சிவகாசி அருகே உள்ள பேராபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (72). ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் தனது மகன் பாண்டியராஜனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை சிவகாசி-சாத்தூர் ரோட்டில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் சுந்தர்ராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஜெகநாதன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.