இரட்டைக்கொலை வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண்
இரட்டைக்கொலை வழக்கில் ெதாடர்புடைய 4 பேர் செங்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தென்காசி
செங்கோட்டை:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதன அல்லி வனப்பகுதி அருகில் செயல்படாத கல்குவாரியில் கடந்த 18-ந் தேதி 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், நிவில் ராஜ் குரூஸ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோசப் வின்சென்ட், ரகு, சுரேன் பாபு, விஷ்ணு வர்மன் ஆகிய 4 பேரும் நேற்று செங்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி சுனில்ராஜா உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story