ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது


ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2023 2:43 AM IST (Updated: 12 Jun 2023 1:27 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய பொக்லின் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய பொக்லின் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏரியில், அனுமதியின்றி மண் அள்ளினர்

பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமத்தில் உள்ள நசுவன் குளத்தில் அனுமதி இல்லாமல் 2 பொக்லின் எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக்கொண்டிருப்பதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில புகார் செய்தார்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 2 பொக்லின் எந்திரம் மூலம் கரம்பயத்தை சேர்ந்த திருஞான மூர்த்தியின் மகன் ஸ்ரீதர்(வயது 26), அதே பகுதியை சேர்ந்த அரசன் மகன் குமார்(30) ஆகிய இருவரும் மண் அள்ளிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ேபாலீசார் கைது செய்தனர்.

4 பேர் கைது

இதேபோல பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி கிராமத்தில் உள்ள ஓட்டேரி ஏரியில் 2 பொக்லின் எந்திரம் மூலம் மண் அள்ளிய திட்டக்குடி பகுதியை ராஜேந்திரன் மகன் மாதரசன்(25), அதே பகுதியை மாரிமுத்து மகன் கலையரசன்(20) ஆகிய 2 பேரையும் கைது செய்து வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லின் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட ஸ்ரீதர், குமார், மாதரசன், கலையரசன் ஆகிய 4 பேரையும் போலீசார், பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story