மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் வடகாடு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை அருகே மதுபான விற்பனையில் ஈடுபட்ட கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 40), தோப்புபட்டியை சேர்ந்த சுப்பையா (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் இருந்து மொத்தம் 61 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இலுப்பூர் அருகே உள்ள வேலங்கால்பட்டியில் மது விற்ற பழனிசாமியை (57) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விராலிமலை தாலுகா அதிரப்பட்டி கிராமத்தில் மதுவிற்ற ராமனை (37) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story