கோத்தகிரியில் மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது
கோத்தகிரியில் மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி பகுதியில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளரான சுரேஷ் (வயது 50) என்பவரைக் கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பாக்கெட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த போது அங்கு ஒருவர் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சக்கத்தா கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (48) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்த கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரைக் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் சண்முக வேல் மற்றும் போலீசார் இடுஹட்டி பரேடி கிராமத்தில் மேற்கொண்ட சோதனையில் குமார் (32) என்பவர் தனது வீட்டின் முன்புறம் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 18 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.