சாராயம் விற்ற 4 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் போலீஸ் சரகம் தேவூர், நீலப்பாடி, வடக்காலத்தூர், காக்கழனி ஊராட்சிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர் அரசு மாணவர் விடுதி அருகே சாராயம் விற்ற இலுப்பூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 40), நீலப்பாடி ஓடம் போக்கி ஆற்று பாலம் பகுதியில் சாராயம் விற்ற நீலப்பாடி கொல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த விஜேயந்திரன் (42) , காக்கழனி கடுவையாற்று பாலம் அருகில் சாராயம் விற்ற நுகத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (50), வடக்காலத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் சாராயம் விற்ற வடக்காலத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்த ஜனகராஜ் (63) ஆகியோர் மீது கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story