சாராயம் விற்ற 4 பேர் கைது


சாராயம் விற்ற 4 பேர் கைது
x

ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார்பேட்டை புதுஓட்டல் தெரு பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சேட்டு என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 32), நாகராஜ் மகன் திலிப்குமார் (33) மற்றும் சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த முருகன் (50), பாச்சல் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story