குளத்தில் மண் திருடிய 4 பேர் கைது


குளத்தில் மண் திருடிய 4 பேர் கைது
x

குளத்தில் மண் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வடக்கு மீனவன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள குளத்தில் சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் திருடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் நெடுங்குளத்தை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 25), சக்தி கணேஷ் (20), வல்லத்து நம்பிகுளத்தை சேர்ந்த பாஸ்கர் (24), தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்த முருகேஷ் (42) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story