பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

கம்பத்தில், கோம்பை ரோட்டில் உள்ள புளியமர தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு நின்ற 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டி சென்று 4 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை ரோடு தெருவைச் சேர்ந்த பிரபு (வயது 42), பழனி (40), கம்பம் விவேகானந்த தெருவை சேர்ந்த இளையராஜா (40), சிவானந்தன் (48) என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story