வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் படுகாயம்
வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3 பேர் படுகாயம்
திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 41) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நாரணாபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மோட்டார் சைக்கிள் கார்த்திக் வாகனத்தின் மீது மோதியதில் கார்த்திக், கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாயூர்நாதபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரன் (24) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் மாவில்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
அதேபோல சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் (23) என்பவர் காரணேசன்-சிறுகுளம் கண்மாய் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிவகாசி கிழக்கு நாரணாபுரம் ரோட்டை சேர்ந்த குருசாமி மகன் ஜோதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ்குமார் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி ஜோதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.