வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் ைகது


வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் ைகது
x

வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62½ பவுன் நகைகள், கத்திகள், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை


சித்தூர் மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62½ பவுன் நகைகள், கத்திகள், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சித்தூரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த்ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

வாகன சோதனை

சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கோபாலபுரம் கிராமம் அருகில் சித்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதையாச்சாரி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சித்தூரில் இருந்து வேலூரை நோக்கி 2 மோட்டார்சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள்

அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா எடப்பாளையம் கிராமம் பாரதிதாசன் தெருைவச் சேர்ந்த ரகுபதி (வயது 35) எனத் தெரிய வந்தது. இவர் தற்போது சித்தூர் ஜோதி நகரில் வசித்து வருகிறார். இவர் மீது தமிழ்நாடு, ஆந்திர மாநில போலீஸ் நிலையங்களில் 32 வழக்குகள் உள்ளன. அதில் முக்கியமாக வழிப்பறி, கொள்ளை, கொலை, திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வாணாபாடி கிராமம் அம்பேத்கர் நகர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த நவீன் என்ற அப்பு (24). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என மொத்தம் 24 வழக்குகள் உள்ளன.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (24). இவர் மீது ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களில் 16 வழக்குகள் உள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா லட்சுமிபுரம் கிராமம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் (34). இவர் மீது 18 வழிப்பறி மற்றும் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

ைகது

இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவும், மதுபானம் குடிப்பதற்கும் கூட்டாகச் சேர்ந்து வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறினர்.

சித்தூர் மாவட்டத்தில் கங்காதரநெல்லூர், பலமநேர், தவனம்பள்ளி, பூதலப்பட்டு, நின்றா, சித்தூர்-1 போலீஸ் நிலையம், 2-வது போலீஸ் நிலையம், புறநகர் போலீஸ் நிலையம் உள்பட 16-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறினர்.

இதையடுத்து 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62½ பவுன் நகைகள், வழிப்பறியில் ஈடுபடும்போது, ஆட்களை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் 4 கத்திகள் மற்றும் ஒரு செல்போன், 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் ெசய்த 62½ பவுன் நகைகளின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும். கைதான 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த்ரெட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினார்.


Next Story