நடைபாதை பிரச்சினை;2 பெண்கள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு


நடைபாதை பிரச்சினை;2 பெண்கள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x

மோகனூரில் நடைபாதை பிரச்சினையில் 2 பெண்கள் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய வாலை இலை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

நடைபாதை பிரச்சினை

மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 40). இலை வியாபாரம் செய்து வருகிறார். அருகிலேயே இவரது அக்கா செல்லம்மாள் என்பவரும் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு பின்புறம் செல்வம் என்பவர் குடியிருந்து வருகிறார். வாழை இலை வியாபாரி. இந்தநிலையில் செல்வம் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழிந்து தினமும் நடைபாதையில் ஓடியது.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 18-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வம், செல்லம்மாள், அவரது கணவர் சுப்பிரமணி மற்றும் வளர்மதி ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் செல்லம்மாள், வளர்மதி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் அதை தடுக்க வந்த திருப்பதி என்பவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

கைது

பின்னர் அவர்கள் 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். திருப்பதி மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தியாகராஜன் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த செல்வத்தை கைது செய்து, நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தார்.


Next Story