மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தம்பதி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூர் செவந்த நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (29). இந்ததம்பதிக்கு ஹேமலதா (12) என்ற மகளும், சந்தோஷ் (10) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகன், மகளை அழைத்து கொண்டு விராலிமலையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். ஆர்.டி.மலை கிழக்கு பகுதியில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே குளித்தலையில் இருந்து தோகைமலை வழியாக திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்வம், முத்துலட்சுமி, ஹேமலதா, சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரான திருச்சி உறையூர் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சட்சிதாநந்தம் என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story