2 பெண்களிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு
சாணார்பட்டி அருகே கோவில் திருவிழாவில் 2 பெண்களிடம் 4 பவுன் சங்கிலி மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி கருப்பணசாமி கோவிலில் நேற்று ஆடி உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது அன்னதானம் சாப்பிடுவதற்காக நின்ற கே.அய்யாபட்டியை சேர்ந்த வேலுமயில் (வயது 65) கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, சுமதி (49) என்பவர் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story