Normal
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தாலி சரடு பறிப்பு
திமிரி அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தாலி சரடை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன், கூலித்தொழிலாளி. இவரின் மனைவி கலா (வயது 42). சம்பவத்தன்று இரவு கலா மற்றும் குடும்பத்தினர் வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்துத் தூங்கினர்.
நேற்று அதிகாலை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கலா அணிந்திருந்த 4 பவுன் தங்கத்தாலி சரடை பறித்துக் கொண்டு தப்பியோடினார். திடுக்கிட்டு எழுந்த கலா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு அலறினார்.
அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்று சிறிது தூரம் துரத்திச் சென்றனர். ஆனால் திருடன் ஒருவரின் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி ெசன்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story