2 வீடுகளில் 4 பவுன் நகைகள் திருட்டு


2 வீடுகளில் 4 பவுன் நகைகள் திருட்டு
x

2 வீடுகளில் 4 பவுன் நகைகள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சின்னப்பாநகர் 4-ம் வீதியை சேர்ந்த குமாரின் மனைவி வெள்ளையம்மாள் (வயது 40). இவரது வீட்டில் மர்மநபர்கள் நுழைந்து பீரோவில் இருந்த 2½ பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல சார்லஸ் நகரில் கலாராணி (55) என்பவரது வீட்டில் 1½ பவுன் தங்க நகையை மர்மநபர் திருடிவிட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக திருக்கோகா்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த 2 திருட்டு சம்பவங்களில் மர்மநபர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் விசாரித்து வருகின்றனர்.


Next Story